கழிவு நீர் கால்வாயில் சடலமாக மீட்க்கப்பட்ட முதியவர்..!! தீவிரமான போலீஸ் விசாரணை..!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கழிவு நீர் கால்வாயில் விழுந்து முதியவர் பலி. பொன்னேரி போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 65) இவர் செல்வ லட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலையில் வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் அந்த அப்பார்ட்மெண்ட் அருகில் உள்ள செப்டிக்டேங்கில் விழுந்து இறந்து கிடப்பது தெரிய வந்ததுள்ளது.
இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சுப்பிரமணியன் உடலை மீட்டனர்.
இதனை தொடர்ந்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செப்டிக் டேங்கில் விஷவாயு கலந்திருந்ததால் அதுதாக்கி இறந்தாரா அல்லது வேறு ஏதாவ துகாரணத்தினால் இறந்தாரா என்பது குறித்து பொன்னேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.