கையும் களவுமாக சிக்கிய அதிகாரி..? எதுக்கா இருக்கும்..?
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் தாயாருக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை தனது மகன் அசோக் குமார் பெயருக்கு கிரையும் செய்ய வேண்டி, பட்டாவிற்கு தடையின்மை சான்று கேட்டு தெற்கு நில வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் தடையின்மை சான்று வழங்க 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் கூறியுள்ளனர். இது குறித்த அசோக் குமார் அளித்த புகாரின் பேரில், நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமாரையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

















