ஓபிஎஸ் – டிடிவி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அ.ம.மு.க. கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உடன் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்திப்பு. டி.டி.வி.தினகரனின் அடையாற்றில் உள்ள ஜெயஹரிணி இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இருதரப்பு தலைவர்களும் கலந்துரையாடி வருகின்றனர். இதையடுத்து வி.கே.சசிகலாவை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.