இனி குழந்தை தத்தெடுப்பிற்கு இது அவசியம்..!! குழந்தைகள் நலம் அறிவிப்பு..!!
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியம், தொழுப்பேடு சுங்கசாவடி அருகே குப்பைகள் நிறைந்த பகுதியில் இருந்து கடந்த மே மாதம் 15ஆம் தேதி அன்று பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு அச்சிறுப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் நல குழுவின் ஆணையின்பேரில், குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் குழந்தைகள் நல குழு அந்த பெண் குழந்தை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த பெண் குழந்தையை குறித்து உரிமை கோர விரும்பம் உள்ளவர்கள் செய்திதாளில் அறிவிப்பு வெளி வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தக்க சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளலாம் என குழந்தைகள் நல குழு தெரிவித்துள்ளது.
எனவே, விவரங்கள் தேவைப்படுவோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 6, தரை தளம், புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு என்ற முகவரியிலும், 63826 13182 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், குழந்தைகள் நலக்குழு, அரசினர் சிறப்பு இல்ல வளாகம், ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு என்ற முகவரிலும், 98406 76135 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர் கொள்ளாலம்.