பாரதத்தின் ஒரு பகுதியாக தமிழகம் என்பதே சரியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தந்து ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது அதனால் இந்தியாவின் ஒரு அங்கமாக இருப்பதால் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனால் பல தரப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா ?
தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18 ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினார்
தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும்— Mano Thangaraj (@Manothangaraj) January 5, 2023
இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆளுநரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர். தில், பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா ?தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18 ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும் என்று ஆளுநருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Discussion about this post