சென்னை மாநகரத்தில் தினமும் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது குறிப்பாக மேட்டரே ரயிலில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் கட்டி வர்கின்றனர். இதனால் மெட்ரோ ரயில் டிக்கெட்களை வாட்ஸ் அப் மூலமே பெற ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தின்தோறும் பணிக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் அரசு வானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதனால் மெட்ரோ ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நேரடியாக பயணச்சீட்டு பெறுவது, பயண அட்டை முறை அல்லது கியூ ஆர் கோடு என மூன்று முறைகள் உள்ளன.
இந்நிலையில் புதிதாக ஒரு வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது, வாட்ஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட்களை பெரும் வசதியை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான கைபேசி எண் பயணிகளுக்கு வழங்கபடும் அந்த எண்ணிற்கு ஹாய் என்று வாட்ஸ் ஆப் செய்தால் ஒரு திரை வரும் அதில் பயணியின் பெயர், புறப்படும் நிலையம் மற்றும் சென்றடையும் இடம் ஆகியவையை பதிவு செய்த பின் google pay போன்ற பயணசீட்டு கட்டணத்தை செலுத்தினால் பயணிகளுக்கு பயணசீட்டு வாட்ஸ் அப்ல் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை ரயில் நிலையத்தில் முன்னுள்ள டிக்கெட் ஸ்கேனரில் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இந்த திட்டம் விரைவில் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.