இனி “பீர்-க்கும் பில்லு” – டாஸ்மாக் கடையில் இனி..?
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுப்பிரியர்கள் புகார் அளித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இதனால் மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த முறைகேடுகளை தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் இனி கம்ப்யூட்டர் பில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு டாஸ்மாக் நிறுவனம்.., ரூபாய் 294 கோடிக்கு ஆர்டர் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகள் கணினி மயமாக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மதுபான விலை மதுபான இருப்பு உட்பட அனைத்தும் இதன் மூலம் குறிப்பிட படும். இதனால் கூடுதல் விலைக்கு விற்கப்படும் மது பானத்தின் விலை குறைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரு சில மதுப்பிரியர்கள்.., கணினி பில் போடுவதோடு கூடவே ஸ்கேன் செய்யும் வசதியும் வைத்து தர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Discussion about this post