சமரசம் கிடையாது..!! அஜித்தை வேலை வாங்கிய பிரபலம்..!!
எந்த வித காம்ப்ரமைசும் இல்லாமல் அஜித்தை வேலை வாங்கி உள்ளார் இவர்…
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது அஜித் குமார் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களிலுமே ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பணியாற்றி இருக்கிறார்.
இந்த படங்கள் குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் அஜித் குறித்து அவர் கூறியுள்ளார்.. அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் மட்டும் இன்றி சீதோஷ்ணம் காரணமாக மாத கணக்கில் படப்பிடிப்பை ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும் விடாமுயற்சி படத்தை பொருத்தவரை அஜித்தை புதிய வடிவில் செதுக்கி இருக்கிறார்.. இயக்குனர் மகிழ்திருமேனி. கதையிலும் ஆக்க்ஷனிலும் எந்தவித சமரசம் (Compromise) செய்யாமல் வேலை வாங்கி இருக்கிறார்.
இந்த பாடத்தின் படப்பெடுப்பின்போது நிஜமாலுமே விபத்து ஏற்பட்ட போதும் அந்த விபத்தையும் ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம்.
அதேபோல் குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொண்டால் அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடியாக கமர்சியல் படமாக இருக்கும் பில்லா படத்திற்கு பிறகு ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் இந்த படத்தில் அஜித்தை பார்க்கலாம்..
விடாமுயற்சியை விட இந்த படத்தில் ஆக்ஷன் காற்றுகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்…