மக்களின் பிரச்சனைக்காக போராட்டத்தில் இறங்கிய துரை வைகோ..!!
மக்கள் பிரச்சினைகளுக்கு மதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் வந்தேபாரத் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை வலியுறுத்தி வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, கோவில்பட்டியை மையமாக கொண்டு மாவட்டம் உருவாக உள்ள நிலையில் வந்தே பாரத் இங்கு நின்று செல்வதை ரெயில்வே துறை புறக்கணிக்க கூடாது என கூறினார்.
வந்தே பாரத் நிற்கும் வரை தொடர்ந்து போராடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்..
Discussion about this post