தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான அஜித் நடித்த துணிவு படமும் விஜயின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அந்த படங்களின் ட்ரைலர் எப்பொழுது என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக வெளியாகவுள்ள நிலையில்,இரு படங்களின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இரு படங்களின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் ஏற்று வருகிறது மேலும் இரு படங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இந்நிலையில் அந்த இப்படங்களின் ட்ரைலர் குறித்தான தகவல் வெளியாகி வருகிறது.
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் புத்தாண்டு அன்று வெளியாகும் என்றும் அஜித்தின் துணிவு படத்தின் ட்ரைலர் அதற்கு முந்தைய நாள் மற்றும் வருடத்தின் கடைசி நாளான டிசெம்பர் 31ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.