அடுத்த லிஸ்ட் ரெடி..!! டி.கே.சிவக்குமாருக்கு உச்சநீதிமன்றம் வைத்து ட்விஸ்ட்..!!
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டெல்லியில் உள்ள டி.கே சிவகுமார் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் சுமார் 8 புள்ளி 5 கோடி கைப்பற்றியதோடு, அவரது வீட்டில் 41 லட்சம் ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்
இது தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கில் 3 மாதங்களில் விசாரணை நிறைவு செய்ய சிபிஐக்கு கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
Discussion about this post