“ஜோதிகா 46” சினிமாவில் கடந்து வந்த பாதை..!!
நடிகை ஜோதிகா அவர்கள் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான “வாலி” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முகவரி, பூவெல்லாம் உன் வாசம், ராஜா படங்களிலும், நடிகர் விஜய்யுடன் திருமலை, குஷி, சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி, உலக நாயகனுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு , சரத்குமாருடன் பச்சைகிளி முத்துச்சரம், சிம்புவுடன் சரவனா, மன்மதன் ஆகிய முன்னனி நட்சத்திரங்களோடும் நடிகை ஜோதிகா அவர்கள் நடித்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இத்தனை நடிகர்களுடனும் பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சூர்யாவிற்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக திகழ்ந்து இவருடன் மட்டும் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், ஜூன் ஆர், சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து பெரிதும் வெற்றியை தந்துள்ளார், அதிலும் காக்க காக்க படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார்கள், மேலும் அப்படத்தில் தான் இவர்களிடையே காதல் மலர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின் அவர்கள் வாழ்க்கையிலும் ஜோடியாகி அவர்களின் வாழ்க்கையை 2006 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது அவர்களுக்கு தேவ், தியா என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
குழந்தைகள் பெற்ற பிறகு திரையுலகத்துக்கு ஜோதிகா வரவில்லையே என கவலையில் இருந்த ரசிகர்களுக்கு 2015 ல் சூப்பரான ஒரு படமான “36 வயதினிலேயே” என களமிறங்கி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார். அடுத்ததாக இவர் ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தை நடித்து மிகவும் பாராட்டுக்குள்ளானார். தற்போது இவர் பாலா இயக்கத்தில் “நாச்சியார்” என்ற படத்தை நடித்துள்ளார்.
நடிகை ஜோதிகா அவர்கள் தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து தொடர்ந்து பல சாதனைகளை பெற மதிமுகம் சார்பாக ஜோதிகா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/10/Picsart_24-10-18_17-28-54-321-1-75x75.jpg)












