நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்…!! உங்கள் பார்வைக்காக..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்துவருவதாக திருச்சி வனகுற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினரும் சிறுமலை வனசரக அதிகாரிகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து தந்தம் கடத்தலில் ஈடுபட்ட பெருமாள், ஜெயக்குமார், பிரபு, ரங்கராஜ், சேகர் மற்றும் ஜோசி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்துள்ள வெங்களூருவை சேர்ந்தவர் ஜகுபர் அலி இவர் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று குவாரியின் உரிமையாளர்களால் கொலை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜகுபர் அலியின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தனது கணவரின் உடலில் உள்ள தடயங்களை காவல்துறையினர் சேகரிக்க தவறிவிட்டதாகவும், எனவே தனது கணவரின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதனை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி வருவாய் வட்டாட்சியர் ராமசாமி தலைமையில் ஜகுபர் அலியின் உடலை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். இதை அடுத்து மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் நகர தலைவர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் பிரதிநிதியாக அதிக பொறுப்பு வகிக்கும் கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் சிறக்க வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை ஆலயத்தின் செயலாளர் சுரேஷ் துவங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று குங்கும அர்ச்சணைகளை செய்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் சூடு மண், உருவ பொம்மை, பெண்கள் விளையாடும் வட்ட சில்லுகள் உட்பட 3,280-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், அகழாய்வில் முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் கொள்ளுப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் மதன்குமார் மற்றும் இராணுவ வீரர் அஜித்குமார் இரசக்கர வாகனத்தில் திப்பம்படி கூட்ரோடு பகுதியில் சென்றுள்ளனர். அப்போது தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர்கள் இருவரும் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்தான சிசடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுதி உள்ளது.