நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் பாணவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று கபடி, ஓட்டப் பந்தயம், கோ-கோ மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாணாவரம் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, மாவட்டத் துணைச் செயலாளர் துரைமஸ்தான் இந்திய வளர்ச்சி இயக்க மாநிலத் திட்ட இயக்குனர் சுமதிஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
திருநல்லூர் :
திருநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றிபெற்ற மாடு பிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகளை மர்ம நபர்கள் சிலர் மூட்டை மூட்டையாக கொட்டி செல்வதாக வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாவதாகவும், இதனால் மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பேரணாம்பட்டு வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த சிவகாந்தன் தனியார் கேஸ் ஏஜென்ஸியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை மர்மநர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..