உங்கள் ஊர் செய்திகள்..! உங்கள் பார்வைக்காக களத்தில் மதிமுகம்…!!
மயிலாடுதுறை மாவட்டம் :
மயிலாடுதுறை சுயம்பு செல்வவிநாயகர் மற்றும் கனக துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் பின்னர் யாகசாலையில் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது ஒரு கிலோவுக்கு நூல் 175 ரூபாய் முதல் 293 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் தெரிவித்துள்ளது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் :
காரைக்காலில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே மத்திய அரசின் பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதுடன், விவசாயிகளின் நகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்திய , மாநிலஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்படுவதால் கடுமையான பணிப் பொலிவுடன் ஏலகிரி மலை காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் :
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாமுவேல் மற்றும் விகில் வர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..