உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்..!!
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த பன்னாட்டு தொழில் அதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், பூலாம்பாடி உட்பட 15 பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் வழங்கினார். இந்நிகழ்வின் போது, வட்டார கல்வி அலுவலர் அம்சவள்ளி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் கீர்த்தனா. தலைமை ஆசிரியர்மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர் மற்றும் சிறை காவலர் தீயணைப்புத்துறை பணியிடங்களுக்கான உடற் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் மார்பளவு எடை உயரம் ஆகியவைகள் சரிபார்க்கப்பட்டு ஓட்டமும் நடத்தப்பட்டது இதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தேவராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருவிடைக்கழி பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பந்தல்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை நந்தகுமார் குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேம்குமார் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையை முன்னாள் துணை சபாநாயகரும் திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பல பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988 முதல் 1993ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் நம்ம ஊர் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் அய்யனார் கோவில் அருகில் கொண்டாடப்பட்டது ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மதுரை மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர்.கிருஷ்ணன் தலைமையில் ரயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..