உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சுற்றி உள்ள ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வண்ணம் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். முகாமில் பழவேற்காடு அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும் போது அவ்வழியில் பயமுறுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளிக்கப்பட்டது.மேலும் அதிக பட்ச மனுக்கள் முதியோர் ஓய்வூதியத்திற்கும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் 30-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா அம்மனுக்கு ஆகாய மார்கமாக பறந்து மாலை அணிவிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக ஊர் பொது மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர் தொடர்ந்து மேலும் மாலை போட்ட பக்தர்கள் அம்மனுக்கு அலகு குத்தியபடி அந்தரத்தில் தொங்கியவாறு அம்மனுக்கு மாலை செலுத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி கற்பூர தீபாராதனை காட்டி எலும்பிச்சை பழம், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள், வில்வ இலை உள்ளிட்ட பொருட்களை கீழே உள்ள பக்தர்களுக்கு வீசினர் அப்பொது பக்தியுடன் பக்தர்கள் எடுத்து சென்றனர் திருவிழாவை காண அப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா, இவர் அதே பகுதியில், ரேணு ஃபேஷன் என்ற துணி கடையில் பணியாற்றி வரும் நிலையில், துணிகடையிற்கு ஆடை எடுப்பது போல் வந்த இரண்டு நபர்கள், ஆடை எடுப்பது போல் நடித்து, ஜெயசுதாவின் கவனத்தை திசை திருப்பி அவரது செல்போனை திருடிச்சென்றுள்ளனர், உடனடியாக அவர்களை ஜெயசுதா மற்றும் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பிடிக்க முயன்ற போது, கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர், பின்னர் இதுகுறித்து, ஜெயசுதா ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு செல்போனை திருடிச்சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி அன்று வீட்டின் வாசற்படியில் உறங்கி கொண்டு இருந்த வயதான மூதாட்டி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கசங்கிலியையும், தொடர்ந்து அடுத்த நாளே தச்சூர் கிராமத்தில் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகைகளையும் ஒரே கும்பலை சேர்ந்த திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மூன்று நபர்களை போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்கு புறம்பாக பேசியுள்ளனர்.
அவர்கள் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் ரகுபிரசாத் மற்றும் பாண்டுரங்கன் என்பவர்கள் என்றும், மூதாட்டியிடமும் கதவை உடைத்தும் நகைகளை திருடியவர்கள் இவர்கள் தான் என தெரிய வந்து மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 19 சவரன் நகைகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை சாலையனுர் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவரை கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர் .மேலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரேன் ஸ்ருதி அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. யு. சந்திரகலா அவர்கள் குற்றவாளியை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார் அதன் பேரில் பாரதியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி வேளாண்மை துறை அலுவலக கூட்ட அரங்கில் விவசாய குறைதீர் கூட்டம் கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் பங்கேற்க கூட்டத்திற்கு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காண வந்திருந்த நிலையில், பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் யாரும் பங்கேற்காததைக் கண்டு ஆவேசம் அடைந்தனர்.
மேலும் தங்களின் குறைகளை தெரிவிக்க வரும் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் யாருமே பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு அதிகாரிகளை கண்டித்து கண்டன ஒழுக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் மக்களுடன் முதல்வர் முகாமிற்கு அனைத்து அதிகாரிகளும் சென்றுவிட்டதால் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று கூறுகின்றனர். இதனால் விவசாயகுறை தீர்வு கூட்டத்தை மாற்று தேதி அறிவிக்குமாறு விவசாயிகள் சார்பில் கேட்டதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என தெரிவிக்கின்றனர் .
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் செய்தியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது இதில் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் பெண் சிசு கொலைகளை தடுத்தல் பெண் குழந்தைகள் கருக்கலைப்பை தடுத்தல் பெண் கல்வியை மேம்படுத்துதல் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்தல் பெண் கல்வி ஊக்கப்படுத்துதல் பெண் கொடுமைகள் தடுத்தல் குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவைகள் செய்தியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது இதில் குழந்தைகள் பாதுகாப்பது குறித்து பல திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறினார்கள் குறிப்பாக கருவிலேயே பாலினம் கண்டறிந்து பெண் குழந்தைகள் கருக்கொலைகளை செய்ய வித்திடும் ஸ்கேன் செண்டர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு கூறினார்கள் இதில் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் திரளான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..