உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சர்வ சக்தி ராஜராஜேஸ்வரி ஆலய 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாரதனை, உள்ளிட்ட நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவினை அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி ராஜராஜேஸ்வரி சேவா சங்க விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மாடியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய ஷெட் அமைத்துத் தர வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அம்மாவட்டத்தை சார்ந்த தொழிலதிபர் சசிக்குமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளியின் மாடியில் புதிய ஷெட் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார். அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்து இருப்பது, தொழிலதிபரின் பெருந்தன்மையை உதாசீனப்படுத்துவது போல் இருப்பதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்..
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வழியாக பேரம்பாக்கம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் விபத்திற்கு முன் ஆட்டோவில் இருந்து தப்பி சென்றுள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம், வேலவன் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் இணைந்து பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஆலோசனை முகாம் மற்றும் மருத்துவ முகாம் பள்ளியின் தாளாளர் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்தும், மூன்று மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை அரசால் 40 இலட்சம் அபராதம் விதித்தும், 9 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் பூம்பாறையில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விம்சர்சையாக நடைபெற்றது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..