உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணை காப்பு உற்சவம் தொடங்கியது. முன்னதாக கண்ணன் திருக்கோளத்தில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் சவுரி திருமஞ்சனம் மற்றும் மூக்குத்தி சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் லட்சம் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மாநகராட்சி 195 வது மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம், தூய்மை பணியாளர்களுக்கான பொங்கல் விழா ஏற்பாடு செய்து பல்வேறு போட்டிகளை நடத்தினார். அதன் பின்னர் அவர்களுக்கு புத்தாடை மற்றும் அறுசுவை உணவு வழங்கி கவுரவித்தார். பின்னர் தூய்மை பணியாளர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
நாமாக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல் முறையாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு நடனம் ஆடினர். மேலும் எவ்வித அசம்பாவிதம் நடைப்பெறாமல் இருக்க காவல்துைறயினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்று குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொங்கல் தினங்களில் சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கடற்கரையில் அபாயக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் சின்னசந்து புதிய அக்ரஹாரம் சாலையை அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.