உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பணிபுரியும் பெண் சமையலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது குறித்த செயல் விளக்கத்தை தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கலந்துகொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு அர்ப்பணிப்போடு உணவு தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே மலைகளிலிருந்து வரும் மழைநீரானது அப்பகுதியில் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. அதில் யூரியா உரம் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கிடவும், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிட கோரியும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளம்பாக்கம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காவலர் செந்தில் வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..