லியோ வெற்றி விழாவிற்கு வந்த புதுசிக்கல்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
லியோ வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பான விண்ணப்பத்தை நேரு உள் விளையாட்டு அரங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.., இதை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பல இன்னல்களை தாண்டி ஒரே வாரத்தில் இந்தியாவில் மட்டும் 461கோடி வசூல் செய்துள்ளது..
படத்தின் நான் ரெடிதான் வரவா பாடல் வெளியானதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் தொடர்ச்சியாக தளபதி விஜய்க்கும் படக்குழுவினருக்கு நேர்ந்தது.., இந்த அனைத்து இன்னல்களையும் தாண்டி தற்போது 461கோடி வசூல் செய்துள்ளநிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்.., நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் வெற்றி விழாவை நடத்த முடிவு செய்தது..
அதற்காக இன்று காலை பெரியமேடு காவல் நிலையத்தில் தளபதி விஜய்க்கு பாதுகாப்பு வேண்டி மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.., ஆனால் அதற்கு காவல் துறையினர் இந்த அரங்கில் 5000 பேருக்கு மட்டும் அனுமதி., வேறு சிறப்பு விருந்தினர் யாரவது வருகிறார்களா என பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே பாதுக்காப்பு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்..
இதனை தொடர்ந்து மற்றொரு சிக்கலாக தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கின் அதிகாரிகள் கடிதத்தை நேரில் வந்து அனுப்பினால் ஏற்றுக்கொள்ள படாது.., மெயிலில் அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த கடிதத்தை நிராகரித்துள்ளனர்.. முக்கியமாக 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்கப்பட வேண்டும்.., 3 நாட்களுக்கு முன்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..