புதிய நீதிக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி கைது..!!
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே புதிய நீதிக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
ஆனால் இந்த போராட்டத்திற்கு முன்னரே இவர்கள் அனுமதி பெற்றிருந்த நிலையில்., போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் அதனை தொடங்காமல் அதன் பின்னர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் காவல்துறையினருக்கும்., புதிய நீதிக்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..
அதன் பின்னர் போராட்டத்தை கை விட்டு கலைந்து செல்லும் படி முறையிட்டுள்ளனர்..
ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது..
அதனால் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.. அதன் பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி சாலையில் படுத்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டதால். பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் “பேரணிக்கு அனுமதி வழங்கி பின் அதனை மறுப்பது என்ன நியாயம்..?” என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..