கோவைக்கு வரும் புதிய ஐ.டி நிறுவனங்கள்..!! ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்…! அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் பேட்டி..!!
ஐ.டி துறையின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அதனை செய்து வருகிறோம். ஐடி கம்பெனிகளை ஈர்க்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றதாக கோவையில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்..
கோவை புரூக்பாண்ட் சாலையில், ஐமெரிட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய மையத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவங்கி வைத்தார். இதில், ஐமெரிட் இன்க் தலைமை செயல் அதிகாரி ராதா ராமஸ்வாமி பாசு கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து இங்குள்ள நுனுக்கங்களை கேட்டறிந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்க அதிமுக ஆட்சியில் இருந்த குளறுபடியால் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
இதில், 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடிக்கு ஒப்பந்தம் முடிக்கப்பட்டு பல நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முழு கட்டிடத்தை எடுக்க மூன்று நிறுவனங்கள் தயார்நிலையில் இருந்தது. ஆனால், அப்படி அளிக்கவில்லை. பல நிறுவனங்களுக்கு அளித்துள்ளோம். இங்கு ஐடி கம்பெனிகளுக்கு நிறைய டிமான்ட் உள்ளது. ஆனால், போதிய இடவசதி இல்லை. முதல்வரின் உத்தரவின் பேரில், நான் மாதம் ஒரு முறை வெளிநாடு செல்லும் போது அங்குள்ள கம்பெனிகளை ஈர்க்கும் பணிகளை செய்து வருகிறேன்.
இதன் மூலம் பல வெளிநாட்டு கம்பெனிகளை ஈர்த்து உள்ளோம். 2023-2024 ஆண்டில் சென்னையில் சுமார் 11 மில்லியன் சதுர அடிக்கு மேல் கம்பெனிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சராசரியாக 50 லட்சம் என இருந்த கம்பெனிகள் பரபரப்பளவு தற்போது ஒரு கோடி சதுர அடி என வளர்ச்சி அடைந்துள்ளது.
இதே போன்ற வளர்ச்சியை கோவையில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய தொழில்நுட்ப பூங்காகளை கட்டுவதில் அரசின் செயல் திறன் சிறப்பாக உள்ளது. மூன்று சிறப்பு பொருளாதர மண்டலத்தில் 3 மில்லியன் சதுர அடியில், ஆபிஸ் பாத் உருவாக்கப்படும். இது போல் தமிழ்நாடு முழுவதும் பல பணிகள் நடந்து வருகிறது.
ஐடி துறையில் உள்ள எல்காட், சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றவைக்கு நிலம் ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் கட்டிடம் கட்டாமல் உள்ளது. இதனை திருத்தி புதிய கட்டடங்கள் கட்ட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் குறைவாக இருப்பதால், பொது குத்தகைக்கு விடும் பாலிசி பணியும் நடக்கிறது. நம்மிடம் திறமைசாலிகள் அதிகமாக உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அளவிற்கு வேறு எந்த மாநிலத்திலும் படித்த இளைஞர்கள் இல்லை. நம் மாநிலத்தில் 20 சதவீதம் படித்த இளைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் தமிழர்கள் ஐடி துறையில் அதிகளவில் உள்ளனர். ஆனால், பெங்களூரில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் 20 சதவீதம் பேர் தான் இருப்பார்கள். ஏ.ஐ டெக்னாலஜி என்பது கட்டாயமான ஒன்றாக மாறியுள்ளது.
தற்போது ஏ.ஐ தொழில்நுட்பம் 5-ம் வகுப்பு படிக்கும் நிலையில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மழலையர் பள்ளி அளவில் தான் இருக்கிறது. இதன் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு இன்னும் 20 வருடங்கள் தேவைப்படும். இதனால், ஏ.ஐ தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு என்பது ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், இந்தியாவுக்கு அதிளவிலான வாய்ப்புகள் கிடைக்க தமிழக அரசின் திட்டம் தான் காரணம். பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி வருகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சிறந்ததாக பார்க்கப்படுகிறது. ஐ.டி துறையின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அதனை செய்து வருகிறோம். ஐடி கம்பெனிகளை ஈர்க்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..