புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள்..! சாலை வியாபாரி மீது பாய்ந்த வழக்கு..!
ஆங்கிலேயர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்திய தண்டனை சட்டங்கள் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) இந்திய சாட்சியங்கள் சட்டங்களுக்கு மாற்றாக இன்று மத்திய அரசால் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது..
காவலர்களிடம் இணையதளம் மூலம் புகாரை பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன், தீவிர குற்றச்சம்பவங்கள், வீடியோ பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.
இந்நிலையில் டெல்லியின் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒரு பாதசாரி மீது மக்களுக்கு இடையூறாக செய்ததாக “பாரதிய நியாய சன்ஹித” எனும் புதிய குற்றவியல் சட்டத்தை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருப்பதாவது மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு அவகாசம் தரப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்ற பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது. எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது என தெரிவித்த முதலமைச்சர் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..