நெல்லை அருகே 17 வயது மகள் பட்டியலின இளைஞரரை காதலித்ததால் தந்தை உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‘
நெல்லை மாவட்டம் , களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் சேர்ந்தவர் மனோஜ் (வயது 20) பட்டியலினத்தை சேர்ந்த இவருக்கும் மாற்று சமூதாயத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமியின் பெற்றோர் திருப்பூரில் சில காலம் வசித்தனர்/இதற்கிடையே, மனோஜ் கடந்த 3 மாதங்களுக்கு சிறுமியுடன் மாயமானார். சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், சிறுமியை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மனோஜை பிடித்து சிறுமியிடம் பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சிறுமி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். பெற்றோருடன் களக்காடு அருகேயுட்ளள அவர்களது சொந்த ஊருக்குச் சென்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமி மனோஜிடம் பேசுவதை சிறுமியின் தந்தை பார்த்துள்ளார். சிறுமியை தந்தை கண்டித்துள்ளார். இதனால், தந்தைக்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த சிறுமியின் தந்தை நேற்று இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் இன்று (ஏப் 21) காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த சிறுமியின் காதலர் மனோஜூம் பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்திற்குச் சென்ற களக்காடு போலீசார் மனோஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் கீழக்கருங்குளம் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் காதலால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
—