இந்திய கடல் பகுதியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 2,500 கிலோ கடத்தல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவில் என்சிபி மற்றும் இந்திய கடற்படை கூட்டு நடவடிக்கையில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பிடித்துள்ளது. இச்சோதனையின் போது 2500 கிலோ மீத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான மெத்தம்பேட்டமைன் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை மற்றும் மாலத்தீவில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கடலில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக கேரளாவிற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இதுவரை சுமார் 3200 கிலோ மெத்தாம்பெட்டமைன், 500 கிலோ ஹெராயின் மற்றும் 529 கிலோ சரஸ் ஆகியவை இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், பிப்ரவரி 2022 இல், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் இந்திய கடற்படையின் கூட்டுக் குழு குஜராத் கடற்கரையில் 529 கிலோ ஹாஷிஸ், 221 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 13 கிலோ ஹெராயின் ஆகியவற்றைக் கைப்பற்றியது. இது பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது.
அதேபோல் அக்டோபர் 2022ம் ஆண்டு கேரளா கடற்படையில் சிக்கிய ஈரானிய படகில் ஆப்கானிஸ்தானுக்கும் கொண்டு வரப்பட்ட 200 கிலோ உயர் ரக ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஈரானிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.