“நவராத்திரி ஸ்பெஷல்..” விற்பனையில் கலைகட்டும் கொலு பொம்மைகள்..!!
நவராத்திரியை முன்னிட்டு தருமபுரி அடுத்துள்ள அதியமான்கோட்டையில் விதவிதமான கொலு பொம்மைகள் தயாரித்து அசத்தல்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விஜயதசமி. கல்வியின் வடிவமாக கருதும் கலைவாணியின் விழாவாக அதனை கொண்டாடி வருகிறோம். விஜயதசமியை முன்னிட்டு ஒன்பது நாள் வீட்டில் கொலு பொம்மை வைத்து பூஜை செய்வர். வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மை பூஜையில், விஷ்ணுவின் தசாவதார காட்சிகள், அஷ்டலட்சுமி, சீனிவாச கல்யாணம், குசேலர் பொம்மைகள், சீதா ராமர் கல்யாணம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருக்கும்.
இந்தாண்டுக்கான நவராத்திரி சில தினங்களுக்குள் துவங்க உள்ளது. அதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தருமபுரி அடுத்துள்ள அதியமான்கோட்டையில் விநாயகர் சதூர்த்திக்கு பிறகு நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு வடிவங்களில் களி மண்ணை கொண்டு கொலு பொம்மைகளாக அச்சுகளில் வடிவமைத்து அதனை காய வைத்து பின் தீயில் சுட்டு விடுகின்றனர். அதன் பிறகு அழகு படுத்தும் பணிகளில் இறங்கி விடுகின்றனர். குறிப்பிட்ட அளவிலான நவராத்திரி பொம்மை செட்களை செய்து முடித்து குடோன்களில் அடுக்கி வைத்துள்ளனர்.
தற்போது இரண்டாம் கட்ட கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதியமான்கோட்டை பகுதியில் தயார் செய்யபடும் கொலு பொம்மைகளை வாங்குவதில், தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநில வியபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள வியபாரிகள் கொலு பொம்மைகளை சென்ற மாதமே ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரின் பெயரில் தற்போது கொலுபொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும் போது, மண்பாண்ட தொழில் நாளுக்கு நாள் அழிந்து வரும் நிலையில் தங்கள் குலத்தொழிலை கைவிடாமல் இன்றும் தங்கள் பகுதியில் 50 குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறோம். களிமண் எடுக்க கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிக பணம் கொடுத்து களிமண் வாங்கி வந்து சிலைகளை செய்கிறோம்.
இந்தாண்டு நவராத்திரியை முன்னிட்டு தற்போது கல்யான காமாட்சி, தசவதாரம், மாயா பஜார், ராமர் பட்டாபிசேகம், சீதா கல்யாணம், பைரவர், துர்கை, குபேர செட், ராமேஸ்வரம் கோயில், பொங்கல் பானை, யசோதா, வள்ளி தெய்வானை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வடிவங்களில் தயாரித்து வருகிறோம்.
மேலும் சீனபெம்மைகள், வடமாநிலத்தவர்கள் தமிழத்தில் வந்து மக்களை கவரும் வகையில் ரசாயணம் கலந்த சிலைகளை செய்கின்றனர். இது பொதுமக்களை கவர்ந்தாலும் இது சுற்றுசூழலை கெடுக்கும் வகையில் உள்ளது. இது போன்று இறக்குமதி செய்யப்பட்ட சிலைகளால் தங்கள் தொழில் மேலும் நலிவடைந்து வருகிறது.
இதனால் தமிழக அரசுக்கு சொந்தமான பூம்புகார் விற்பனை நிலையம், காதிகிராப்ட் மற்றும் அரசு விழாக்களில் நடைபெறும் பல்த்துறை கண்காட்சியில் சிலைகளை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..