சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்..!
மிளகு மற்றும் வெல்லத்தை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகு, இரண்டு கிராம்பையும் எடுத்து நெய்யில் நன்றாக வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
வால் மிளகு நான்கு எடுத்து சிறிதளவு புழுங்கலரிசியுடன் எடுத்து வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.
தூய்மையான அருகம்புல் சிறிது எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கி சிறிது நேரம் வைத்திருந்தால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கிய பின் தேனை பல் ஈறு முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து வாயை நீர் கொண்டு கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
தேங்காய் எண்ணெயை தினமும் பலமுறை உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு உதட்டு புண், உதட்டில் தோல் உரிதல் ஆகியன குணமடையும் .
அரிசி மற்றும் திப்பிலி இரண்டையும் சிறிதளவு எடுத்து பத்து நாட்கள் தேனில் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கி வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தினமும் இரவு ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து குடித்து வர காலை வேலையில் புத்துணர்ச்சி பெறலாம். துளசி இலையை வெயிலில் உலர வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
மற்றும் குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசிபொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டு வர, ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமடையும். மற்றும் தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
கற்கண்டு மற்றும் துளசி இலையின் சாறு, 150 மிலி இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்சி தினமும் ஒரு வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு இருவேளை சாப்பிட்ட பின் பசும்பால் அருந்தலாம்.
இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பால் எடுத்து இருதுளியைக் கண்களில் விட்டு வர கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமடையும் . மாதுளை பழம் இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
சித்தரத்தை சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் ஆகியன குணமாகும். பூண்டுவின் தோல்,ஓமம், மிளகு, ஆகியவற்றை சிறிதளவு இடித்து நெருப்பு அனலில் இட்டு அதன் புகையைப் பிடித்தால் மூக்கில் ஏற்பட்ட அடைப்பு, நீர்வடிதல் ஆகிய நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை நன்றாக சூடு படுத்தி கொஞ்சம் தேன் கலந்து தினமும் 3வேளையம் உள்ளங்கையில் விட்டு சாப்பிட வேண்டும்.
இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். எலுமிச்சை பழசாற்றையும் , தேனையும், சமஅளவில் உட்கொண்டு வர சளி இருமல் ஆகியன குணமடையும் . தலையில் ஏற்பட்ட நீர்கோவை விலகும்.
வீரப்பெருமாள் வீர விநாயகம்