மீண்டும் நாகூர் ஹனிபாவின் குரல்..!! ஹபீபி பாடலை வெளியீடு..!!
நாகூர் ஹனிபாவின் 100-வது பிறந்தநாளில் AI தொழில்நுட்பம் மூலம் அவரது குரலில் உருவாக்கப்பட்ட பாடலின் குறுந்தட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இசை முரசு நாகூர் ஈ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தமிழ் இசைக்கும், திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய நாகூர் E.M. ஹனிபா அவர்களின் பங்களிப்பை போற்றி பெருமை சேர்க்கும் வகையில் ஹபீபி என்ற திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் அவரது குரலில் உருவாக்கப்பட்ட பாடலின் குறுந்தட்டினை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், கழகத்தின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்..! எல்லோரும் கொண்டாடுவோம்..
தலைவர் கலைஞரின் நண்பரும் – ஆருயிர்ச் சகோதரருமான “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்..
இந்த நிகழ்வின்போது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, கழக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் இறையன்பன் குத்தூஸ் மற்றும் “ஹபீபி” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடித்துள்ள திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, – இந்த ஹபீபி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சி.எஸ்.சாம், இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..