நள்ளிரவில் மாயமான பள்ளி மாணவி..! மறுநாள் இந்நிலையிலா பெற்றோர் பார்க்க வேண்டும்..?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன் தாங்கள் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் உஷா தம்பதிக்கு 16 வயதில் மகளும் 9 வயதில் மகனும் உள்ளனர். மகள் சுபா செஞ்சி ராஜா தேசிங்கு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி.., தம்பியுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு.., சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து மாணவி சுபா.., வெளியே சென்று விட்டு வருவதாக தம்பி மகேஷிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த கன்னியப்பன், உஷா மகளை காணவில்லை என மகனிடம் கேட்டுள்ளனர்.., அதற்கு மகேஷ் அக்கா வெகு நேரமாக காணவில்லை. வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றால்.., என சொல்ல. பரிதவித்த பெற்றோர்.., மாணவியை அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.
வெகு நேரம் ஆகியும் காணாததால் போலீசில் புகார் அளித்துள்ளனர்.., புகாரின் பெயரில் போலீசார் சுற்று பகுதியில் தேட தொடங்கியுள்ளனர்.., அப்பொழுது வீட்டின் அருகே உள்ள கிணற்றின் பக்கத்தில் மாணவியின் செருப்பு கிடந்துள்ளது. பின் தீ அணைப்பு துறைக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.., பின் மீட்பு பணியினர் மாணவியை சடலமாக கிணற்றில் இருந்து தூக்கியுள்ளனர்.
இந்த சம்பவம்.., கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..