நாயின் தொடையை கடித்த மர்மவிலங்கு… பீதி அடைந்த மக்கள்.. வனத்துறையினர் விசாரணை..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் உள்ள குப்பனேரிபள்ளம் என்ற பகுதியில் நள்ளிரவு திடீரென அங்கு நாய்கள் குறைக்கும் சத்தம் மற்றும் மயில்கள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.
அதிக சத்தங்கள் கேட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்த போது அங்கு நாயின் தொடை பகுதியில் மர்ம விலங்கு கடித்து தோல் கீழே தொங்கியவாரு இருந்தது இதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து வாணியம்பாடி வனத்துறை வனசரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம விலங்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைப்பகுதிகள் ஒட்டியுள்ளதால் நாய்களை கடித்து சென்றது சிறுத்தையாக அல்லது காட்டுபன்றியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”