என் 28 வருட உழைப்பு; இது என் மகளின் கனவு – மகளின் கனவை நினைவாக்கிய தாய்..!!
பெற்றோர்கள் அனைவருக்கும் பிள்ளைகளின் எதிர்காலம், பற்றிய பயம் இருக்கும். கூடவே அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.
பிள்ளைகளின் கனவை நிறைவேற்று வதற்காக, பெற்றோர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் அல்ல.., அப்படி பிள்ளைகளின் கனவிற்காக மட்டும் உழைக்கும் ஒரு தாயை பற்றி பார்க்கலாம்.
28 வருடங்களுக்கும் மேலாக சுயமாக தொழில் செய்து வரும் தேவி எனும் அம்மா அறிமுகமானார், 28 வருடங்களாக ஸ்டீல் பட்டறை நடத்தி வருகிறார். இது பற்றி அவரிடம் பேச ஆரமித்தோம்.
நான் பள்ளிக்கூடம் பக்கமே போனது இல்ல.., எங்களுடையது காதல் திருமணம் என்பதால் பலரின் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. பல தடைகளை தாண்டி காதலித்தவரையே மனம் முடித்தேன். என் கணவருக்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை, அதனால் சுயமாக ஸ்டீல் பட்டறை தொழில் செய்ய தொடங்கினோம்.
ஒரு வருடம் வரைக்கும் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது. பின் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.., என் கணவர் என்னை இனி நீ தொழிலை கவனித்துக்கொள்ள வர வேண்டாம். வீட்டிலேயே இரு என்று சொல்லி விட்டார். சில மாதங்களுக்கு பிறகு தொழிலில் நட்டம் ஏற்பட்டது.
அவர் மனம் வருத்தப்பட்டார், பின் அவருக்கு உதவ நினைத்து.., மீண்டும் அவர் தொழிலை பழைய நிலமைக்கு கொண்டு வந்தேன், அதை பார்த்து அவர் எனக்கென்று ஒரு தொழில் அமைத்துக்கொடுத்தார். ஆனால் நான் சுயமாக தொழில் செய்ய தொடங்கிய பின் தான், பல போராட்டங்கள்.
பெண்களுக்கு எதற்கு இந்த சுய தொழில் வீட்டில் வீட்டு வேலை செய்வது, குழந்தைகளை பார்ப்பது போன்ற வேலைகளை செய்யலாமே.., என்று எல்லாம் சொன்னாரகள். அதை எல்லாம் நான் பொருட் படுத்தவில்லை, எனக்கென்று ஒரு “அடையாளம்” எனக்கென்று ஒரு “அங்கீகாரம்” வேண்டும் என்ற நோக்கில் தான் இதை தொடங்கினேன்.
3 வருடங்களுக்கு பிறகு இன்னொரு பெண் குழந்தை, இரண்டும் பெண் குழந்தை என்பதால் என் கணவர் என்னை விட்டு சென்று விட்டார். பின் குழநதைகளுக்காக உழைக்க தொடங்கினேன். அன்று நான் தொடங்கிய ஸ்டீல் பட்டறை வெறும் வாடகைக்கு எடுத்து தான் தொடங்கினேன்.
ஆனால் இந்து 6 சொந்த ஸ்டீல் பட்டறை என் இரு மகள்களும் மருத்துவர்.., என் மகளின் சிறு வயது கனவு மருத்துவராக வேண்டும் என்பது.., பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதை மட்டும் தான், நான் செய்தேன். அதற்கான, முழு முயற்சி எடுத்து எல்லாம் என் மகள்கள் மட்டும் தான்.
தனி ஒரு பெண்ணாக நின்று போராடி கொண்டிருக்கும் பெண்களுக்கு நான் சொல்ல வருவது ஒன்று மட்டும் தான். உங்களால் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்கிறது என்று நீங்க நம்புங்க. மத்தவங்க என்ன பேசுவாங்க.., நினைச்சா அடுத்த கட்டத்துக்கு போக முடியாது என்று சொன்னார்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post