கடந்த சில நாட்களாக சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை இன்று ராக்கெட் வேகத்தில் சர்ரென உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து 5,680 ரூபாயாகவும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து 45,440 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அ
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து 6,147 ரூபாயாகவும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து 49,176 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 79 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1000 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக டாலர் மதிப்பு சரிந்து வருவது முதலீட்டாளர்களை தங்கத்தின் மீது முதலீடு செய்ய தூண்டியுள்ளது. இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post