“மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” அது உண்மைக்கு புறம்பானவை..!! மோனிஷா கொடுத்த விளக்கம்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்..,
அதில் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பில் இருந்த சிவா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்றொரு ரவுடியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்பும், வெளிநாடு செல்தற்கு முன்பு யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை குறித்த பட்டியலை காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அதில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்தது தெரியவந்தது. பின்னர் மோனிஷாவிடம் இது குறித்து விசாரித்த போது வழக்கறிஞர் கிருஷ்ணன் தனது தோழன் என்று கூறிய அவர் அது தொடர்பான புகைப்படத்தை காட்டியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அது தொடர்பாக சில விளக்கங்களை மோனிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மோனிஷா நெல்சனின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளதாகவும்., அவர்களின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.. அதற்காக மொட்டை கிருஷ்ணன் தொடர்பான விளக்கங்களை காவல்துறையினரிடம் அவர் வழங்கியுள்ளார். இந்த வழக்கு சம்மந்தமாக மோனிஷா காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவரது தரப்பில் தெரியவந்துள்ளது..
இதுகுறித்து மோனிஷா கூறுகையில் “மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை என்றும் நிதியுதவி அளித்ததாகவும் கூறியுள்ளார்.. பல பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அது உண்மைக்கு புறம்பானவை. மோனிஷா மற்றும் அவரது கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நீக்க வேண்டும்., இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்சனின் மனைவி மோனிஷா வழக்கறிஞர் என்பதால், சில வழக்குகள் தொடர்பாக கூட அவரிடம் பேசியிருப்போம் மற்றபடி மொட்டை கிருஷ்ணனுக்கு தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மோனிஷா விளக்கம் அளித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..