திருப்பூர் அருகே தாய் மகள்கள் உயிரிழப்பு…!! போலீஸ் விசாரணை தீவிரம்…!
திருப்பூர் அருகே செயல்படாத கல்குவாரி பாறைகுழியில் தேங்கிய நீரில் மூழ்கிய தாய், இரண்டு மகள்கள் என 3 பேர் உயிரிழப்பு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த 63 வேலம்பாளையம் வாஷிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி ரேவதி மற்றும் அவரது மகள்கள் பிரகன்யா பிரகாஷினி என மூன்று பேரும் இன்று வீட்டு அருகே உள்ள செயல்படாத கல்குவாரி பாறைக்குழியில் தேங்கியுள்ள நேரில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக குழியில் தங்கி இருந்த நீரில் விழுந்து மூழ்கினர்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்பு துறையினர் ரேவதி மற்றும் குழந்தை பிரகாஷிணியின் உடல்களை மீட்டனர். மேலும் பிரகன்யா உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..