10 ஆண்டுகளாக குப்பைகளில் வாழ்ந்து வரும் தாய்-மகள்.. தகவலிறிந்து சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி..!
கோவை காட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ருக்மணி (60) மற்றும் அவரது மகள் திவ்யா (40) இருவரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர்.
பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த இவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் யாருடனும் எந்த விதமான பேச்சுவார்த்தையும் இல்லாமல் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பல வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாததால் வீடே குப்பைக் காடாக காட்சி அளிக்கிறது. அதற்குள் எறும்பு, கரையான், பல்லி, பூரான், கரப்பான், எலி மூட்டைப்பூச்சிகள் வீடு முழுவதும் நிறைந்து கிடக்கும் குப்பையில் இருக்கிறது.
கெட்டுப்போன உணவையும் சுகாதாரமற்ற புழுக்கள் நெளியும் நீரைக் குடித்தும் வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.
இத்தகைய சூழலால் அவர்கள் இருவருக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கும் கூட சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி, மாநகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றபட்டனர். மேலும் இருவரும் மனநல பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
-பவானி கார்த்திக்