ADVERTISEMENT
பள்ளிப் பேருந்து ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம்!!!
சாலை பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய, பள்ளிப் பேருந்துகள் ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கரூர் சாலை பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து சாலை விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விளக்க உரையை மண்டல போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் வழங்கினர்.
அதில், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் போதும், இறுக்கி விடும் போதும் மற்றும் பயணம் செய்யும்போதும், பேருந்து ஓட்டுநர், பெண் கண்காணிப்பாளரும் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.