குரங்கு அம்மையை தடுப்பு நடவடிக்கை..!! சிறப்பாக கையாளும் ஒன்றிய அரசு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!
குரங்கு அம்மையை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் லட்சம் கணக்கானோர் உயிர் இழந்தனர்.., பெரும்பாலானோர் அதனால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.. கொரோனோ தொற்றை தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது.
ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குரங்கம்மை நோய் தற்போது 116 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முதன் முதலில் காங்கோவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த பாதிப்பு தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
மேலும் 500க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.., தற்போது இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி வருகிறது..
இந்த குரங்கம்மை பாதிப்பானது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து காற்றின் மூலம் பரவாமல் உடல் ரீதியான தொடர்பில் இருந்தாலோ, அல்லது அவர்களுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேல் உடன் இருந்தாலோ குரங்கம்மை தொற்று நோய் ஏற்படும் என தெரிவித்துள்ளது..
கொரோனா தொற்றில் நடந்ததை போல இந்த முறை நடக்காதவாறு பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு சில நடவடிகக்கைகளை மேற்கொண்டுள்ளது.. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டினர் நாட்டிற்குள் வரும்போது சோதனைகள் குரங்கம்மையால் பாதிக்கப்படவில்லை என உறுதி அளித்தபின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
இந்த குரங்கம்மை வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக பல்வேறு ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளது.. என மத்திய அரசு அறிவித்துள்ளது., குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் மிஸ்ரா தலைமையில் நடத்தப்பட்டது.
அதில் “குரங்கு அம்மை பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அதனை வேகமாக கண்டறிவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் குறித்தும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேரடியாக கண்காணிப்பதற்காக சில குழுக்களை அமைத்து பரிசோதித்ததில் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
எனவே பொதுமக்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விஆர்டிஎஸ் ஆய்வகங்கள் இருக்கும் நிலையில் அதில் சுமார் 30 ஆய்வகங்களில் மட்டுமே குரங்கம்மை வைரஸை கண்டுபிடிப்பதற்கான வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன், குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு சிறப்பாக கையாள்கிறது என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; எனவே தீவிரமாக கண்காணிக்கிறோம். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட குரங்கு அம்மை சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை உள்ளிட்ட 4 நகரங்களில் தனி வார்டுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..