தூத்துக்குடி சார்பாதிவாளர் அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய பணம்…! 7 மணி நேரம் விசாரணையில் நடந்தது..?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர் தளவாய் ஜம்புநாதன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், போலீஸார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு இன்று வந்தனர்.
அவர்களில் சிலர் ஓட்டுநர், நடத்துநர் போன்று காக்கி சட்டை, பேன்ட் மற்றும் கைலி அணிந்து மாறுவேடத்தில் வந்திருந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வந்ததும், மற்ற பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கப்பட்டு, அதில் பொதுமக்களை மட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலக பிரதான நுழைவாயில் கதவு மூடப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓட்டுநர் உரிமம் பெற புகைப்படம் எடுக்கும் அறை உட்பட அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு அறைகள் , கழிப்பறை ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுட்டனர்.
மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பூட்டப்பட்ட அறையில் விசாரணை நடத்தினர். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மட்டும் வெளியே அனுப்பி விட்டனர்
மேலும் அலுவலகத்துக்கு உள்ளே இருந்த தரகர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து மற்றும் சிற்றுந்து பேருந்துகளின் உரிமையாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த கைபேசிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கணினிகள் மற்றும் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இதில், கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 16ஆயிரத்து 910 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், ஊழியர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய தரகர்கள் உள்ளிட்டோரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..