ஆரத்திக்கு பணமா..? எடப்பாடி வேணாம் பங்கு மாட்டிப்ப..!!
லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதிகாரப்பூர்வமாக இன்று திருச்சி அருகே 40 தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழ்நாடு, புதுவையில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய எடப்பாடி பழனிசாமி. மக்களவை தேர்தலையொட்டி தேமுதிக, எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மக்களவை வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அப்பகுதியில் நடந்து சென்று, மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது வேட்பாளர் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க முயன்ற போது எடப்பாடி பழனிசாமி.., வேட்பாளரின் கையை தடுத்து டேய் மாட்டிப்படா என சொல்லியது அங்கிருந்த பெண்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களிடம் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.