சோதனை சாவடியில் இன்று பிடிபட்ட பணம்..?
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அலங்கியம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது, அந்த வழியாக டாடா சொகுசு கார் வந்து கொண்டு இருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 92,500 கொண்டு சென்ற ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் விசாரித்த போது பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மகன் செல்லமுத்து என்பது தெரிய வந்தது. மேலும் 92,500 ரொக்க பணத்தை தேர்தல் அதிகாரி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் அவர்களிடம் ஒப்படைத்து, கைப்பற்றிய பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..