சீனா விரித்த வலையில் சிக்கிய மாலத்தீவு..!! பீதியில் அதிபர் முய்ஸு..!!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் முக்கியமான இடத்தில் மாலத்தீவு அமைந்திருப்பதால் இந்தியாவும் சீனாவும் பல்வேறு உதவிகளை மாலத்தீவுக்குத் செய்து வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே உருவான பிரச்சனை அனைவருக்கும் தெரியும்.
மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்ஸு பொறுப்பேற்றதில் இருந்தே இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். முய்ஸுவை பொறுத்தவரை சீனாவின் ஆதரவை நிலைநாட்டுபவராக பேசப்பட்டது. மாலத்தீவு தேர்தலில் வெற்றி பெரும் அதிபர் இந்தியாவிற்கு வருவது வழக்கம் ஆனால் முயஸு சீனாவிற்கு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆயுதங்களை வாங்கவும் சீனாவுடன் முக்கிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அங்கே உள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிக்கை வெளியானது. இதனால் இந்தியா மாலத்தீவு நாட்டிற்கு இடையே போர் தொடங்கியது.
இந்தியாவிற்கு மாலத்தீவுக்கு 400.9 மில்லியன் டாலர் கடனை அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால், மாலத்தீவில் இப்போது மாலத்தீவின் கஜானா காலியாக இருப்பதால், போர் என்ற ஒன்றை கையாள முயற்சித்துள்ளது. மேலும் இவர் அதிபராக இருந்த போது சீனாவிடம் கடன்வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களுக்காகச் சீனாவிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கியதே இப்போது மாலத்தீவுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மாலத்தீவுக்கு மொத்தம் 3 பில்லியின் டாலர் அதாவது சுமார் ரூ.2500 கோடி வெளிநாட்டுக் கடன் இருக்கிறது.
அதில் 42% சீனாவிடம் இருந்து பெற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடனும் மாலத்தீவின் கழுத்தை நெறித்துள்ளது மாலத்தீவு அதிபராக முய்ஸு பதவியேற்ற உடனேயே இந்த கடனை திருப்பி செலுத்தக் கூடுதல் கால அவகாசம் அளித்தும் கடனை திருப்பி அளிக்காததால் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளை சீனாவிடம் ஒப்படைக்கும் படி மாலத்தீவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.