சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி முதலாவதாக விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டு அதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற உள்ள விவேகானந்தர் பன்பாட்டு மையதிற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தபசி ஆனந்தா எழுதிய புத்தகத்தை வெளியிட்டார்.
சென்னையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், பல்லாவரம் அல்ஸ்டாம் மைதானம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்த அவர் அதனை தொடர்ந்து,சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து பின் அங்கிருந்து கார் மூலம் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் முதலாவதாக விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற உள்ள விவேகானந்தர் பன்பாட்டு மையதிற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தபசி ஆனந்தா எழுதிய புத்தகத்தை வெளியிட்டார், அதன் பின் நிகழ்ச்சியில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,கலந்து கொண்டனர்.
பின்னர், மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்கு காரில் சென்று, விமானப் படை ஹெலிகாப்டரில் விமான நிலையம் சென்று,மாலை 6.30 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி சாலை எங்கிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் மெரினா கடற்கரைக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.