காணமால் போனதாக கருதப்பட்ட 10ம் வகுப்பு மாணவி, அரை குறையான ஆடைகளுடன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சடலமாக மீட்கப்பட்ட தகவலறிந்து திரண்ட பொதுமக்களும், மாணவியின் பெற்றோர், உறவினர்களும் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரையில் பிரேத பரிசோதனை செய்ய மறுத்து போராட்டம் நடத்தியதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும்’ கூட்டத்தினரைக் கலைத்தனர்
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினஜ்பூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து டியூஷனுக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தங்கள் மகள் டடியூஷன் முடிந்து வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர், ட்யூஷன் செண்டர், மகளின் தோழிகள் வீடு என்று அன்றைய இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், மகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

















