“ஏவுகணை நாயகன் – இளைஞர்களின் முன்னோடி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்”
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் 193ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தவர் தான் “அப்துல் கலாம்”. அங்குள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். படிக்கும் போதே குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, வீடுகளில் செய்தித்தாள் போடுவது போன்ற சிறு சிறு வேலைகள் செய்தே தனது தேவைகளை பார்த்துக் கொண்டவர். படிப்பிலும் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தவர்.
அக்னி-1 திட்டம் :
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்த அப்துல் கலாம், 1955ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி விண்வெளி பொறியியல் படிப்பு முடித்தார். பின்னர் அதிலே முதுகலைப் பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO)-வாக பணியாற்றினார்.
இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக இருந்த “அக்னி-1” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்., இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து, பின் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் “டாக்டர் அப்துல் கலாம்”.
ஏவுகணை விஞ்ஞானி :
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை திறம்பட செயல்பட்டார். “ஏவுகணை விஞ்ஞானி”, “மக்களின் குடியரசுத் தலைவர்” என பலராலும் போற்றப்பட்டார். அவரது “அக்னி சிறகுகள், இந்தியா 2020” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் பல இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டியதாக இருந்தது.
விருதுகள் :
1981-ல் பத்ம பூஷண், 1990-ல் பத்ம விபூஷண், 1997-ல் பாரத ரத்னா விருது பெற்றவர். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதன் அவசியம் குறித்து இளைஞர்கள் மனதில் விதையாக விதைத்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
காற்றில் கலந்த அப்துல் கலாம் :
மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் உரையாடுவதில் பேர் ஆர்வம் கொண்டவர். அப்படி ஒருமுறை 2015ம் ஜூலை 27-ம் தேதி ஷில்லாங் ஐஐஎம்-ல் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.
லட்சியக் கனவு காணுங்கள் என இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உரமூட்டிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாளில் அவரது கனவை நிறைவேற்றி இந்தியாவை பல துறைகளிலும் முன்னேற்றுவோம் என உறுதி ஏற்போம்.
கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாகத் திகழும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று. எளிய பின்னணியில் இருந்து வந்து இந்தியாவின் மிக உயரிய பதவியை அலங்கரித்த அப்துல் கலாமின் நினைவை இன்றைய நாளில் போற்றுவோம்.
– லோகேஸ்வரி.வெ