சிறுமி பாலியல் வன்கொடுமை..!! 6 வாலிபர்கள் கைது..!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் புதுச்சேரி மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழக்கக்கோரியும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மாநில முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 58 வயதுடைய முதியவர் விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் விவேகானந்தன் கடந்தாண்டு காலாப்பட்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து ஒராண்டு ஆகிய நிலையில் மீண்டும் முத்தியால்பேட்டை சோலை நகரில் இரண்டு பள்ளி மாணவிகள் கூட்டு பலாத்தகாரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி, 8 ம் வகுப்பு வரை படித்துவிட்டு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி சிறுமி மற்றும் அவருடைய தோழி (இவரும் இடைநிற்றல் மாணவி) ஆகியோர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் இல்லாதததை கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து, இருவரையும் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து 2 சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் வைத்திக்குப்பத்தை சேர்ந்த புஷ்பராஜ், மணி ஆகியோர் 2 சிறுமிகளை காதலிப்பதாக கூறி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
மேலும் அந்த 2 வாலிபர்கள், அவர்களின் நண்பர்களை அழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இவ்வழக்கை போக்சாே வழக்குபதிந்து புஷ்பராஜ், மணி ஆகியோர் முத்தியால்பேட்டை கிரைம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த 2 சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாகவும், அதில் 14 பேரை சிறுமிகள் அடையாளம் காட்டியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.