சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை கடையை ஆய்வு செய்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சில பத்திரிக்கைகள், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது. இந்த மாலில் உள்ள கடைகளை பொறுத்தவரை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும் தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது ATM உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்து கொள்ளலாம் என்ற தவறான செய்தியை பரப்புகின்றனர்.
இந்த கடைக்குள் அந்த தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளததா , அல்லது வெளியேவா 24 மணி நேரமும் எடுக்க முடியுமா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம்.
டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் .
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூடப்படுமா என்ற கேள்விக்கு. பதிலளித்த அவர், வணிக வளாகங்களில் மட்டுமே இதுபோன்ற மதுபான விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது சில்லறை விற்பனை கடைகளில் இது போன்ற மதுபான விற்பனை இயந்திரம் கிடையாது. முதலில் சில்லறை விற்பனை கடைகள் 500 மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் முடியட்டும் என்றார்.

















