ஜாமீன் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!! சென்னை உயர்நீதி மன்றத்தின் முடிவு..?
ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று திருப்பி அனுப்பியது.
அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மேல் முறையீடு செய்துள்ளார்.
சிறைநாட்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்.., மீண்டும் செந்தில் பாலாஜிக்கு சிறைநாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது, அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர் படுத்தியும் இந்த உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்துள்ளனர், அந்த விசாரணையில் அவர் கொடுத்த வாக்கு மூலங்கள் அனைத்தும் விடீயோவாகவும், ஸ்கிரிப்ட் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலங்கள் அனைத்தும் தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று ஜாமின் கேட்ட சென்ற செந்தில்பாலாஜிக்கு முதன்மை அமர்வுநீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என சிறப்பு நீதிமன்றம் அறிவுறை செய்துள்ளது. அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தொடுத்துள்ளார்.
ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது இன்றும் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..