கூட்டுறவு சங்க பதவிக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவிகாலம் 5 ஆண்டு. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிகாலம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு செயல் அலுவலர்கள் அதன் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.
தொடக்க கூட்டுறவு சங்க பதவிக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழக தேர்தல் ஆணையம், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வழிகாட்டுதலையும் அறிவிப்புகளையும் செய்யும். தேர்தலுக்கு தேவையான உதவிகளை கூட்டுறவுத்துறை வழங்க தயாராக உள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த ஆணையம் இருப்பதுபோல் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த ஆணையமானது கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post