அரியலூர் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சென்ற அமைச்சர் மதிவேந்தன்..!!
அரியலூர் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் மேலகருப்பூர் ஊராட்சியில், அரியலூர் வனச்சரக புதிய நாற்றாங்காலினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காடுகளை சார்ந்திருக்கும் வாழ்வியலையும், உயிரியலையும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு எளிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டுமானால் இந்த மாதிரியான பறவைகள் சரணாலயம் மட்டுமின்றி பல்வேறு பாதுகாக்கப்பட்ட மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மாதிரியான சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வை நமது வனத்துறையின் மூலமாக வழங்குவதை முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ச்சியாக செய்து வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன்
கூறினார்.
Discussion about this post